உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை

Published On 2023-04-11 09:38 GMT   |   Update On 2023-04-11 09:38 GMT
  • உற்பத்தி அதிகரிக்கப்படும் என மேயர் மகேஷ் உறுதி
  • ஆவின் பால் தட்டுப்பாடு குறித்து மேயர் மகேஷுக்கும் புகார்கள் சென்றது

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. நாகர்கோவில் நகரில் இன்று காலையிலும் ஆவின் பால் தட்டுப்பாடு இருந்தது. இதனால் ஆவின் பாலகத்திற்கு பால் வாங்க வந்த பொதுமக்கள் பால் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஆவின் பால் தட்டுப்பாடு குறித்து மேயர் மகேஷுக்கும் புகார்கள் சென்றது. இதையடுத்து இன்று காலை அவர், ஆவின் பாலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆவின் பொது செயலாளர் நடராஜனுடன் பால் தட்டுப்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் மேயர் மகேஷ் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகிறது. தற்பொழுது தமிழக அரசு கறவை மாடுகள் வாங்க அதிக நிதி ஒதுக்கி உள்ளது. குமரி மாவட்டத்திலும் மாடுகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

குமரி மாவட்டத்தில் பால் உற்பத்தியை பெருக்கு வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாவட்டத் திற்கு 23 ஆயிரம் லிட்டர் பால் தேவைப்படும் நிலையில், தற்பொழுது 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே கிடைக்கிறது. நமது மாவட் டத்தில் 6 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

வெளி மாவட்டங்களில் இருந்து மீதமுள்ள பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு பால் குறைவான அளவு வருகிறது. இதை நிவர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இது தொடர்பாக அதிகாரியிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பால் தட்டுப்பாடு பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் நாசரை சந்தித்து பேச உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது துணை மேயர் மேரி பிரின்சிலதா, மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News