உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்

Published On 2022-10-25 08:08 GMT   |   Update On 2022-10-25 08:08 GMT
  • சப்-இன்ஸ்பெக்டர் - ஏட்டு படுகாயம்
  • புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

புதுக்கடை அருகே உள்ள பெத்தேல்புரம் பகுதி கூட்ட விளை என்ற இடத்தை சேர்ந்தவர் பிரடெரிக் பொன்குமார் (வயது 52).

இவர் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக உள்ளார். நீரோடி காலனி சோதனை சாவடி யில் பணியில் இருந்த பிர டெரிக் பொன்குமார், பணி முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.

மண்டைக்காடு போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் நெல்சனும் அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். புதுக்கடை அருகே உள்ள பார்த்திபபுரம் - பைங்குளம் சாலையில் செல்லும்போது, எதிர் புறத்தில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பிரெடரிக் ஒட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப் பட்ட பிரடெரிக் பொன் குமார், நெல்சன் ஆகி யோர் பலத்த காயம் அடைந்தனர். பிரடெரிக் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், நெல்சன் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்துக்குள்ளான மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த புதுக்கடை கைசூண்டி பகுதியை சேர்ந்த முருகன் மகன் அனோஜ் என்பவரும் காயம் அடைந்தார். அவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News