உள்ளூர் செய்திகள்

ஆற்றூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.89.5 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி

Published On 2023-05-24 09:04 GMT   |   Update On 2023-05-24 09:04 GMT
  • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
  • 2 விதவைகளுக்கு தலா 3 ஆடுகள் வீதம் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி :

குமரி மாவட்டம் திருவட்டார் தெற்கு ஒன்றியம் ஆற்றூர் பேரூ ராட்சிக்குட்பட்ட ஆற்றூர் புளியமூடு முதல் ஞாறாகுளம் பள்ளிக்குழி விளை வரை செல்லும் சாலை மிகவும் மோச மடைந்து காணப் பட்டது.

அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தமிழக பால்வளத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.89.5 லட்சம் மதிப் பீட்டில் தார் சாலை அமைக்க நிதி பரிந்துரைக்க ப்பட்டது.

இந்த சாலை பணியை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். ஆற்றூர் பேரூர் செயலாளர் சோழராஜன் தலைமை தாங்கினார். ஆற்றூர் பேரூராட்சி தலைவர் பீனா அமிர்தராஜ், துணை தலைவர் தலைவர் தங்க வேல், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், முன்னாள் ஏற்றக்கோடு ஊராட்சி மன்ற தலைவர் றூஸ், திருவட்டார் ஒன்றிய மீனவரணி துணை அமைப்பாளர் ஆன்றனி, வார்டு கவுன்சிலர்கள் ஜேம்ஸ், பாபுராஜ், கவி, ராஜகுமாரி மற்றும் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து 2 விதவைகளுக்கு தலா 3 ஆடுகள் வீதம் வழங்கப்பட்டது. ஏழை மாணவனுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு கல்வி உதவி தொகையும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News