உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 37.77 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2022-06-24 05:45 GMT   |   Update On 2022-06-24 05:45 GMT
  • அதிகபட்சமாக 19 லட்சத்து42 ஆயிரத்து 471 ஆண்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
  • ஜூலை,10-ந்தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 37.77 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று முதல் தவணை தடுப்பூசியை 21 லட்சத்து 24 ஆயிரத்து 183 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை16 லட்சத்து, 83 ஆயிரத்து 70 பேர் செலுத்தியுள்ளனர். 19 ஆயிரத்து856 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

அதிகபட்சமாக 19 லட்சத்து42 ஆயிரத்து 471 ஆண்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். பெண்கள் 18 லட்சத்து 14 ஆயிரத்து 117 பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். அதிகபட்சமாக 18 வயதை கடந்த, 21 லட்சத்து 99 ஆயிரத்து 080 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

பொதுமக்கள் பயன்பெற வசதியாக மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தலைமை அரசு மருத்துவமனை, தாலுகா அளவிலான மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 'கோவேக்சின்', 'கோவிஷீல்டு' முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது.இந்த இடங்களில் இதுவரை தடுப்பூசியே செலுத்தாதவர் செலுத்தி கொள்ள முடியும். ஜூலை, 10-ந்தேதி அடுத்த மாதத்துக்கான மெகா தடுப்பூசி முகாம் நடத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

Tags:    

Similar News