உள்ளூர் செய்திகள்

ஹெல்மெட், முகக்கவசம் அணிவது குறித்து இருசக்கர வாகன ஓட்டிகளிடம் அறிவுரை வழங்கிய போலீஸார்.

தருமபுரியில் ஹெல்மெட், முகக்கவசம் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

Published On 2022-06-29 09:57 GMT   |   Update On 2022-06-29 09:57 GMT
  • வாகன சோதனையின்போது போலீசார் விழிப்புணர்வு செய்தார்.
  • முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை எச்சரித்து அனுப்பினார்.

தருமபுரி,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவத்தொடங்கியதை அடுத்து தமிழக அரசு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியானதை அடுத்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில் தருமபுரி நகரப்பகுதியில் போக்கு வரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் பயன்களையும் மற்றும் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்க ேவண்டும்.

அதனால் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுரை கூறி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Similar News