உள்ளூர் செய்திகள்

தருமபுரி நகரில் காலை 8 மணிக்கு பிறகு திடீர் பனிப்பொழிவு

Published On 2023-01-13 10:09 GMT   |   Update On 2023-01-13 10:09 GMT
  • நான்கு மாதங்கள் பனி பொழிவு அதிகமாக காணப்படும்.
  • காலை 8 மணிக்கு பிறகு பனிப்பொழிவு கடுமையாக காணப்பட்டது.

தருமபுரி,

தமிழ் மாதத்தில் கார்த்திகை மாதம் தொடக்கத்தில் இருந்து மாசி மாதம் வரை நான்கு மாதங்கள் பனி பொழிவு அதிகமாக காணப்படும்.

கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடுமையான பனிபொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் தொடர் மழை இருந்து வந்தது. தற்போது, இரண்டு வாரமாக மழை பொழியவில்லை. தொடர்ந்து மழை நின்றதால், தருமபுரி மாவட்டம் முழுவதும் கடுங்குளிர் நிலவி வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் பனிப் பொழிவும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, ஒட்டப்பட்டி, தேவரசம்பட்டி, கலெக்டர் இல்லம், அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடுமையான பனிப்பொழிவு இருந்து வரும் ஆனால் இன்று விடியற்காலை 7 மணி வரை பனிப்பொழிவு இல்லாமல் இருந்தது.

திடீரென வழக்கத்திற்கு மாறாக காலை 8 மணிக்கு பிறகு பனிப்பொழிவு கடுமையாக காணப்பட்டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர். கடுமையான குளிரும் வீசியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Tags:    

Similar News