உள்ளூர் செய்திகள்

(கோப்பு படம்)

தொடர் விடுமுறை எதிரொலி- சென்னையில் இருந்து வெளி ஊர்களுக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published On 2022-09-30 03:36 GMT   |   Update On 2022-09-30 03:36 GMT
  • இன்றும் நாளையும் மொத்தம் 2050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
  • பயணிகள் கூட்ட நெரிலை தவிர்க்க அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு.

காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்காக வரும் 3ந் தேதி தவிர்த்து, நாளை முதல் வரும் ஐந்தாம் தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் வருகின்றன. மேலும் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்லுவோர் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என கருதப்படுகிறது.

இதையொட்டி இன்றும் நாளையும், சென்னையில் இருந்து 2050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளோடு கூடுதலாக இயக்கப்படும் இந்த சிறப்பு பேருந்துகள், கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி பைபாசில் உள்ள பணிமனை ஆகிய 3 இடங்களில் இருந்து செல்கின்றன. இதன் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இன்று மாலை நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவனந்தபுரம், தென்காசி, கன்னியாகுமரி, மதுரை போன்ற தென் மாவட்ட பகுதிகளுக்கு  சிறப்பு பேருந்துகள் புறப்படுகின்றன.

Tags:    

Similar News