உள்ளூர் செய்திகள்

கொட்டக்குடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு

குரங்கணியில் பெய்த கன மழையால் கொட்டக்குடி ஆற்றில் அடித்து வரப்பட்ட ராட்சத மரங்கள்

Published On 2022-07-29 08:03 GMT   |   Update On 2022-07-29 08:04 GMT
  • மலைப் பகுதிகளான குரங்கணி, கொட்டகுடி பகுதிகளில் நேற்று இரவு 2வது நாளாக கனமழை பெய்தது.
  • கொட்டகுடி மற்றும் கூவலிங்க ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ராட்சஷ மரங்கள் செடி கொடிகள் அடித்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான குரங்கணி, கொட்டகுடி பகுதிகளில் நேற்று இரவு 2வது நாளாக கனமழை பெய்தது.

இதனால் கொட்டகுடி மற்றும் கூவலிங்க ஆறுகளில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் கண்மாய்களுக்கு செல்லும் நீர்வரத்து பகுதியான அணைப் பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கொட்டகுடி மற்றும் கூவலிங்க ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ராட்சஷ மரங்கள் செடி கொடிகள் அடித்து வரப்பட்டு அணைப் பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் அணைக்கட்டின் மேல் புறத்தில் ஆங்காங்கே ஆபத்தான நிலையில் உள்ளன.

நீர்வரத்து அதிகரித்துள்ள தாலும் ஆங்காங்கே மரங்கள் விழுந்து கிடப்பதாலும் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் குளிக்க தடை விதிக்கப்பட்டு எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் இருப்பதால் ராட்சத மரங்களை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News