உள்ளூர் செய்திகள்

இலவச மருத்துவமுகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

ஷிபா மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

Published On 2022-06-10 09:42 GMT   |   Update On 2022-06-10 09:52 GMT
  • முகாமில் எக்கோ, ஈ.சி.ஜி, ரத்தத்தின் சர்க்கரை அளவு, யூரிக் அமிலம், எலும்பு தாது அடர்த்தி, நுரையீரல் பரிசோதனை போன்றவைகள் இலவசமாக செய்யப்பட்டது.
  • 10-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

நெல்லை:

நெல்லை ஷிபா மருத்துவமனையின் நிறுவனர் எம்.கே.முகம்மது ஹீசைன் சாகிப் நினைவாக மருத்துவமனை வளாகத்தில், மாபெரும் இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது.

முகாமில் ரூ.5ஆயிரம் மதிப்புள்ள எக்கோ, ஈ.சி.ஜி, ரத்தத்தின் சர்க்கரை அளவு, யூரிக் அமிலம், எலும்பு தாது அடர்த்தி, நுரையீரல் பரிசோதனை போன்றவைகள் இலவசமாக செய்யப்பட்டது.

மேலும் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் எம்.கே.எம். முகம்மது ஷாபி கூறியதாவது:-

ஆண்டுதோறும் ஜூன்10-ந்தேதி ஷிபா மருத்துவமனையின் நிறுவனர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மருத்துவமனையின் நிறுவனர் அல்ஹாஜ் எம்.கே.முகம்மது ஹீசைன் சாகிப் நினைவாக நடைபெற்ற மருத்துவ முகாமை தொடர்ந்து இன்று மாலை ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

இது ஒவ்வொரு ஆண்டும் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனையின் மார்க்கெட்டிங் பிரிவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News