உள்ளூர் செய்திகள்

செஞ்சியை சேர்ந்தவர்களுக்கு பட்டியல் இன வகுப்புச் சான்றிதழ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அருகில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், மாவட்ட கலெக்டர் மோகன் ஆகியோர் உள்ளனர்.

செஞ்சியை சேர்ந்தவர்களுக்கு மனு கொடுத்த சிலமணி நேரத்தில் பட்டியல் இன சான்று வழங்கிய முதலமைச்சர்

Published On 2022-07-10 06:40 GMT   |   Update On 2022-07-10 06:40 GMT
  • செஞ்சியை சேர்ந்தவர்களுக்கு மனு கொடுத்த சிலமணி நேரத்தில் பட்டியல் இன சான்றினை முதலமைச்சர் வழங்கினார்.
  • தங்களுக்கு வகுப்புச் சான்றிதழ் வழங்கிட ஆவண செய்ய வேண்டுமென்று கேட்டு கொண்டனர்.

விழுப்புரம்:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலை சென்றார். அவர் செல்லும் வழியில், செஞ்சியை சேர்ந்த முருகன் மகன்வாசன், மகள் பூஜா ஆகியோர் முதல்-அமைச்சரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கடந்த 7 ஆண்டுகளாக பட்டியல் இன வகுப்பு சான்றிதழ்கள் வழங்கப்படாம ல்இருக்கிறது, எனவே, தங்களுக்கு வகுப்புச் சான்றிதழ் வழங்கிட ஆவண செய்ய வேண்டுமென்று கேட்டு கொண்டனர். அம்மனுவினை பரிசீலித்த முதல்-அமைச்சர் உரிய விசாரணை மேற்கொண்டு பட்டியல் இன வகுப்புச் சான்றிதழ்கள் வழங்கிட விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதன்மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, திருவண்ணாமலையில் அரசு விழாவினை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பும் வழியில் முதல்-அமைச்சர் செஞ்சியில் மாணவன் வாசன். மாணவி பூஜா ஆகியோருக்கு பட்டியல் இன வகுப்புச் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் மற்றும் மாணவரின் பெற்றோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News