உள்ளூர் செய்திகள்

வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அமைதி பேச்சுவார்த்தையை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள்

Update: 2022-10-07 05:32 GMT
  • எரியோடு வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
  • பேச்சுவார்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையால் கடந்த 2006 ஆம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. அதனை ரத்து செய்ய பரிந்துரை செய்த எரியோடு வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் சக்திவேலன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக பொன்னுதுரை, ரவி, முருகேசன், அசோகன், சோமசுந்தரம், பிரஸ்நேவ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில் பயனாளிகளுக்கு வீட்டுமனையை விரைவில் பிரித்து கொடுப்பதாகவும், ஒரு மாத காலத்திற்குள் புதிதாக விண்ணப்பம் அளிப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிடுவதாக அவர்கள் தெரிவித்து சென்றனர்.

Tags:    

Similar News