உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பாலாற்றில் ஆக்கிரமிப்பு அகற்றபட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2022-06-23 08:18 GMT   |   Update On 2022-06-23 08:18 GMT
  • ஆற்றுப்பாதையில் தென்னைகள் உள்ளிட்ட மரங்கள் வளர்க்கப்பட்டன.
  • ராவணபுரம்,தேவனூர் புதூர் ஊராட்சி பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உள்ளது.

உடுமலை :

உடுமலை திருமூர்த்திமலையில் இருந்து பாலாறு வழியாக அணைக்கு தண்ணீர் செல்கிறது. இந்த பாலாறு ஆனைமலை அருகே நா.மு சங்கம் பகுதியில் ஆழியாற்றில் கலக்கிறது.

வழியில் பல இடங்களில் ஆறு ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. ஆற்றுப்பாதையில் தென்னைகள் உள்ளிட்ட மரங்கள் வளர்க்கப்பட்டன.இந்நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக தற்போது பாலாற்றில் அதிக தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் மூலம் ராவணபுரம் ,தேவனூர் புதூர் ஊராட்சி பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. இந்த பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் வேளாண் பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.

விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதாலும் குடிநீருக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதாலும் கிராம மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News