உள்ளூர் செய்திகள்

ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

Published On 2022-12-11 09:30 GMT   |   Update On 2022-12-11 09:30 GMT
  • ஊர்க்காவல் படையினருக்கான ஆட்கள் தேர்வு ஈரோடு அருகே ஆனைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.
  • சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பிறகு, உடற்தகுதி தேர்வு நடந்தது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் துறைக்கு உதவியாக பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளுக்கு ஊர்காவல் படையினர் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 67 ஊர்க்காவல் படை பணியிடங்களை நிரப்புவதற்காக போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஊர்க்காவல் படையினருக்கான ஆட்கள் தேர்வு ஈரோடு அருகே ஆனைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.

இதில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.

அதில் 169 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் பங்கேற்றனர். சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பிறகு, உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் உயரம், எடை பார்க்கப்பட்டு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

இதில் 14 பெண்கள் உள்பட மொத்தம் 136 பேர் தேர்வு செய்யப்ப ட்டார்கள். அவர்களின் நன்னடத்தை விவரங்களை சரிபார்த்த பிறகு காலியாக உள்ள 67 இடங்களில் 58 ஆண்கள், 9 பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News