search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்கள் தேர்வு"

    • கூட்டுறவு துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது.
    • வருகிற டிசம்பர் 1-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப் பாட்டின்கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள். கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள்.

    மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் இதர சங்கங்களில் காலியாக உள்ள இளநிலை உதவி யாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக ராமநாத புரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த 10-ந் தேதி அன்று அறிவிக்கை வெளியிடப் பட்டுள்ளது.

    இத்தேர்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் www.drbramnad.net என்ற இணையதளம் வழியாக (through online only) மட்டுமே வருகிற 1-ந் தேதி அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப் படுகின்றன. இதற்கான எழுத்துத் தேர்வு வருகிற 24-ந் தேதி அன்று முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ராமநாதபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது. இதற்கான கல்வித் தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree 10+2+3 முறையில்) மற்றும் கூட்டு றவு பயிற்சி ஆகும். வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம் புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்த வர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்க ளும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24-ம் ஆண்டு நேரடி பயிற்சி/அஞ்சல்வழி பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ளவர்களும் இப்பணிக்கு உரிய சான்று/கட்டணம் செலுத்தியதற்கான ரசீதினை ராமநாதபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.முற்பட்ட வகுப்பின ருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. எழுத்துத் தேர்வு பட்டப்படிப்பு நிலையிலான தரத்துடனும், கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நிதி மற்றும் வங்கியியல் கூட்டுறவு கணக்கியல், பயன்பாடு, பொது அறிவு, தமிழ் போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகையில் (Objective Type) 200 வினாக்களுடன் 170 மதிப்பெண்களுக்கான உக்காரதாகவும் தேர்வுக்கான கால அளவு 180 நிமிடங்கள் கொண்டதாகவும் இருக்கும். வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழில் அச்சடிக்கப்பட்டிருக்கும்.

    எழுத்துத் தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வுக்கான மதிப்பெண் முறையே 85:15 என்ற விகிதத்தில் இருக்கும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்விலும் நேர்முகத் தேர்விலும் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்ப டையில் அரசாணைப் படியான ஒதுக்கீடு இனச்சுழற்சி முறை, அவர்கள் தெரிவித்த முன்னுரிமை விருப்பச் சங்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, உரிய சங்கத்திற்கு இதுக்கீடு செய்யப்படுவார்கள்.

    • நேர்காணல் வருகிற 11ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடக்கிறது.
    • கூடுதல் விவரங்களுக்கு 0421 224 0153 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாக உள்ள செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படவுள்ளது.நேர்காணல் வருகிற 11ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடக்கிறது.

    செவிலியர் பணியிடம் - 14 பேர் (சம்பளம் ரூ.14 ஆயிரம் ). தகுதி - பி.எஸ்சி., நர்சிங், அல்லது எ.என்.எம்., அல்லது டி.ஜி.என்.எம்., படிப்பு.

    லேப் டெக்னீஷியன் - 2 பேர். (சம்பளம் ரூ. 13 ஆயிரம் ). தகுதி - மெடிக்கல் லேப் டெக்னாலஜியில் பி.எஸ்சி., அல்லது டிப்ளமோ. மருத்துவமனை பணியாளர் - ஒருவர். (சம்பளம் 8,500 ரூபாய்). தகுதி குறைந்தபட்சம், 8ம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு 0421 224 0153 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 19 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    • 3 மாதங்களுக்கான எம்.எஸ்.ஆபிஸ் சான்றிதழுடன் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக அவினாசி, குடிமங்கலம், காங்கயம், குண்டடம், பல்லடம், பொங்கலூர், திருப்பூர், உடுமலை, ஊத்துக்குளி, வெள்ளகோவில் ஆகிய வட்டாரங்களில் உள்ள 19 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூடிய குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கான எம்.எஸ்.ஆபிஸ் சான்றிதழுடன் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 வருடம் இதே போன்ற திட்டங்களில் பணிபுரிந்திருக்க வேண்டும். முன் அனுபவம் குறிப்பிட்டுள்ள காலத்தில் நற்பணியாற்றியிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டாரத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். வருகிற 6-ந் தேதி எழுத்துத்தேர்வும், 9-ந் தேதி நேர்முகத்தேர்வும் நடககும். தகுதி வாய்ந்தவர்கள் இணை இயக்குனர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், எண்.42, கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் 641 601 என்ற முகவரிக்கு வருகிற 22-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.

    • ஈரோடு அரசு மருத்துவமனை டி.பி.ஹாலில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர், ஓட்டுனர் பணிக்கான நேர்காணல் நடக்க உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு அரசு மருத்துவமனை டி.பி.ஹாலில் வரும் 28-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர், ஓட்டுனர் பணிக்கான நேர்காணல் நடக்க உள்ளது.

    மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்.சி., நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி.,  பி.எஸ்.சி., விலங்கியல், உயிரியல், தாவரவியல், பயோகெமிஸ்டரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, பிளான்ட் பயாலஜி படித்திருக்கலாம். இவர்களுக்கு மாதம் 15,435 ரூபாய் ஊதியம்.

    இதில் 19 முதல் 30 வயதினர் பங்கேற்கலாம். எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பான நேர்காணல் நடக்கும்.

    ஓட்டுனர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 24 முதல் 35 வயதினர் இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள் அனுபவம் பேட்ஜ் பெற்றவர்கள் பங்கேற்கலாம்.

    இவர்களுக்கு 15,235 ரூபாய் ஊதியம். எழுத்து தேர்வு, தொழில் நுட்ப தேர்வு, மனித வள துறை நேர்காணல், கண் பார்வை, வாகனம் ஓட்டி தேர்வு நடத்தப்படும்.

    கூடுதல் விபரம் அறிய 73388 94971, 73977 24829, 73977 24813 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • ஊர்க்காவல் படையினருக்கான ஆட்கள் தேர்வு ஈரோடு அருகே ஆனைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.
    • சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பிறகு, உடற்தகுதி தேர்வு நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் துறைக்கு உதவியாக பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளுக்கு ஊர்காவல் படையினர் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 67 ஊர்க்காவல் படை பணியிடங்களை நிரப்புவதற்காக போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஊர்க்காவல் படையினருக்கான ஆட்கள் தேர்வு ஈரோடு அருகே ஆனைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.

    இதில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.

    அதில் 169 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் பங்கேற்றனர். சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பிறகு, உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் உயரம், எடை பார்க்கப்பட்டு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

    இதில் 14 பெண்கள் உள்பட மொத்தம் 136 பேர் தேர்வு செய்யப்ப ட்டார்கள். அவர்களின் நன்னடத்தை விவரங்களை சரிபார்த்த பிறகு காலியாக உள்ள 67 இடங்களில் 58 ஆண்கள், 9 பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • சிவகங்கையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 28-ந் தேதி நடக்கிறது.
    • வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலைவாய்ப்பற்ற இளைஞா்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் வௌ்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்்துறை வேலை வாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

    வருகிற 28-ந் தேதி (வௌ்ளிக்கிழமை) காலை 10 மணிஅளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

    சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வேலை நாடுநர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்்தி தனியார்் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெறலாம்.

    இதில் இலவச திறன்பயிற்சிக்கான விண்ணப்பபடிவம், போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவா் சோ்க்கை, வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவி த்தொகை பெறுவதற்கான விண்ணப்பபடிவம் ஆகியவையும்் வழங்கப்படும்.

    விருப்பமுள்ளவர்கள் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த இளைஞா்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு அடையாள அட்டை, ஆதார்்அட்டையுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவுமூப்பு ரத்துசெய்யப்படமாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெளி மாவட்டங்களில் இருந்து வந்த இளைஞர்கள் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் குவிந்தனர்
    • செப்டம்பர் 1-ந் தேதி வரை ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்த 36 ஆயிரம் இளைஞர்களுக்கு அழைப்பு அனுப்ப்பட்டு, தினமும் 3 ஆயிரம் பேர் தேர்வுக்கு அழைக்க ப்பட்டு உள்ளனர்.போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த தேர்வு நள்ளிரவில் மட்டுமே நடக்கிறது.

    நேற்று முன்தினம் தொடங்கிய ஆட்கள் தேர்வு, இன்று ( திங்கட்கிழமை) 3-வது நாளாக நடக்க உள்ளது. தேர்வில் பங்கேற்ப தற்காக வெளிமாவட்ட இளைஞர்கள் தினமும் ரெயில் மூலம் நாகர்கோவில் வருகின்றனர்.

    அவர்கள் தேர்வு முகாமில் பங்கேற்று விட்டு மீண்டும் ரெயில் மூலம் ஊருக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்.

    இரவில் தேர்வில் பங்கேற்று விட்டு காலையில் ரெயில் நிலையம் வருபவர்களுக்கு இரவில் தான் ரெயில் உள்ளது என்பதால் அங்கேயே தங்கி ஓய்வு எடுக்கின்றனர்.

    இதனால் நாகர்கோவில் ரெயில் நிலையம் கடந்த சில நாட்களாக களை கட்டி காணப்படுகிறது. செப்டம்பர் 1-ந் தேதி வரை ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது.

    • வெளியூரில் இருந்து இளைஞர்கள் குவிந்தனர்
    • இன்று இரவு 2-வது நாளாக ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆட்கள் சேர்ப்பு முகாம் நடக்கிறது‌.

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, நாகை, சிவகங்கை, மயிலாடுதுறை, கரூர், திண்டுக்கல், விருதுநகர், காரைக்கால், பெரம்பலூர் உள்பட 17 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள உள்ளனர்.

    முதல் நாளான இன்று நடந்த ஆள்சேர்ப்பு முகாமில் 3000 பேர் கலந்து கொள்வதற்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்.

    நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய ரானுவத்திற் கான ஆள் சேர்ப்பு முகாம் விடிய விடிய நடந்தது. அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்ததால் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட வர்கள் வந்திருந்தனர். இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு 1600 மீட்டர் ஓட்டம் மற்றும் உடல் தகுதிகள், சான்றிதழ்கள், சோதனை செய்யப்பட்டது. ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொண்ட ஏராளமான இளைஞர்கள் 1600 மீட்டர் தூரத்தை ஒட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். 160-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய ஆட்கள் சேர்ப்பு முகாம் இன்று அதிகாலை 6 மணி வரை நடந்தது. தேர்வு பணி நடந்ததையடுத்து இரவை பகலாக்கும் வகையில் அண்ணா விளையாட்ட ரங்கத்தில் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப் பட்டு இருந்தது. இன்று இரவு 2-வது நாளாக ராணு வத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஏராள மான இளைஞர்கள் காலையிலேயே நாகர்கோவி லுக்கு வந்தனர். பஸ் மற்றும் ெரயில் மூலமாக அவர்கள் இங்கு வந்து சேர்ந்தனர். வடசேரி பஸ் நிலையப் பகுதியில் ஏராளமான இளை ஞர்கள் வந்து அமர்ந் திருந்தனர்.

    வருகிற 1-ந்தேதி வரை ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடை பெறுகிறது. ராணுவத்திற் கான ஆள் சேர்ப்பு முகாம் நள்ளிரவு நடைபெற்று வருவதையடுத்து பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படவில்லை பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டது.

    • மதுரை வேலைவாய்ப்பு மையத்தில் நாளை ஆட்கள் தேர்வு நடக்கிறது.
    • நாளை (12-ந் தேதி) காலை 10 மணிக்கு மதுரை புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு வரவேண்டும்.

    மதுரை

    மதுரை புதூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நாளை (12-ந்தேதி) தனியார் துறை ஆட்கள் தேர்வு முகாம் நடக்கிறது. 10-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டம் வரையிலும், ஐடிஐ சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் டிப்ளமோ நர்சிங், நர்சிங், பிசியோதெரபி படித்தவர்கள் இதில் கலந்து கொண்டு தகுதிக்கேற்ப தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் பெறலாம். இதற்காக வேலை தேடுவோர் மற்றும் தனியார் நிறுவனங்கள் வேலைநாடுநர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in இணைய தளத்தில் சுயவிவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் கல்விச்சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (12-ந் தேதி) காலை 10 மணிக்கு மதுரை புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு வரவேண்டும். தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலகப்பதிவு பாதிக்கப்படாது" என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்தார்.

    • டூல் அண்டு டை மேக்கர் தொழிற் பிரிவில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது.
    • வயர்மேன் தொழிற் பிரிவில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது.

    தாராபுரம் :

    தாராபுரத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) கைவினைஞர் பயிற்சி திட்டமாக மாற்றப்பட்ட தொழிற் பிரிவுகளில் இரண்டு முழுநேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டூல் அண்டு டை மேக்கர் தொழிற் பிரிவில் ஒரு காலிப்பணியிடம் (முழுநேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர்) உள்ளது. இந்தப்பணியிடமானது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர் மரபினர் - முன்னுரிமையற்றவர் என்ற இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.

    இதற்கு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு, டிப்ளமோ இன் டூல் அன்ட் டை மேக்கர், 3 வருட தொழில் அனுபவம், என்.ஏ.சி. டூல் அன்ட் டை மேக்கர் பணிக்கு 2 வருட தொழில் அனுபவம் கல்வி தகுதி ஆகும்.

    வயர்மேன் தொழிற் பிரிவில் ஒரு காலிப்பணியிடம் (தற்காலிக முழுநேர, தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர்) உள்ளது. இந்தப் பணியிடமானது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் தவிர) - முன்னுரிமையற்றவர் என்ற இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்திருக்க வேண்டும். என்.டி.சி. வயர்மேன் டிரேடு பணிக்கு 3வருட தொழில் அனுபவம், என்.ஏ.சி. வயர்மேன் டிரேடு பணிக்கு 2 வருட தொழில் அனுபவம் கல்வித்தகுதி ஆகும்.

    பத்தாம் வகுப்பு படித்த பின்னர் ஐடிஐ முடித்தவர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 32 வரை ஆகும். 12ம் வகுப்பு படித்து விட்டு ஐடிஐ முடித்தவர்கள் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை . தகுதியான தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர்களுக்கு மாதம் ரூ.20,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும். தகுதியுடையவர்கள் உரிய சான்றிதழ்களின் ஒளிப்பட நகல்களுடன் தாராபுரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், தாராபுரம் - 638657 என்ற முகவரிக்கு வரும் 19.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என முதல்வர், தாராபுரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் தெரிவித்துள்ளார். 

    • நாகர்கோவிலில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வைத்து இந்த ஆட்சேர்ப்பு முகாம்
    • தேர்வு முகாமில் 17 அரை முதல் 23 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த இளைஞர்கள் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆட்கள் சேர்ப்பு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 21-ந் தேதி முதல் செப்டம்பர் 1-ந் தேதி வரை நடக்கிறது. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வைத்து இந்த ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    திருச்சியில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்காக நடத்தப்படும் இந்த தேர்வு முகாமில் 17 அரை முதல் 23 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். 10 - ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    இதில் கலந்து கொள்ள விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    ஊதியம், படிகள் மற்றும் இத்துடன் கிடைக்கப்பெறும் நிதியுதவிகள், உடல் தகுதிகள், மருத்துவ தேர்வு போன்ற கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தை முழுமையாக பார்வையிட்டு அதில் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ள மாதிரியை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இதனை மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடலூரில் ஊர்க்காவல் படை கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது.
    • கடலோர காவல் குழமம் பணிக்கு 35 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஊர்க்காவல் படைக்கு 24 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஊர்காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு ஆட்கள் உடற்தேர்வு இன்று கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. ஊர்க்காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமம் ஆட்கள் தேர்வு நடைபெறுவதை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் சக்திகணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் கடலோர காவல் குழமம் பணிக்கு 35 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஊர்க்காவல் படைக்கு 24 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கடலோர காவல் படை மற்றும் ஊர்க்காவல் படை உடற்தேர்வு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், ஊர்க்காவல் படை வட்டார தளபதி அம்ஜத்கான், ஊர் காவல் படை துணை வட்டார துணைதளபதி கலாவதி, ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருட்செல்வம், ஊர் காவல் படை சப் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் மற்றும் காவல் அதிகாரிகள், ஊர் காவல் படை அதிகாரிகள் உடற்தேர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×