தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 28-ந் தேதி நடக்கிறது. வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
Published on

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் வௌ்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்்துறை வேலை வாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

வருகிற 28-ந் தேதி (வௌ்ளிக்கிழமை) காலை 10 மணிஅளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வேலை நாடுநர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்்தி தனியார்் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெறலாம்.

இதில் இலவச திறன்பயிற்சிக்கான விண்ணப்பபடிவம், போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவா் சோ்க்கை, வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவி த்தொகை பெறுவதற்கான விண்ணப்பபடிவம் ஆகியவையும்் வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த இளைஞா்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு அடையாள அட்டை, ஆதார்்அட்டையுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவுமூப்பு ரத்துசெய்யப்படமாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com