வேலைவாய்ப்பு மையத்தில் ஆட்கள் தேர்வு

மதுரை வேலைவாய்ப்பு மையத்தில் நாளை ஆட்கள் தேர்வு நடக்கிறது. நாளை (12-ந் தேதி) காலை 10 மணிக்கு மதுரை புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு வரவேண்டும்.
வேலைவாய்ப்பு மையத்தில் ஆட்கள் தேர்வு
Published on

மதுரை

மதுரை புதூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நாளை (12-ந்தேதி) தனியார் துறை ஆட்கள் தேர்வு முகாம் நடக்கிறது. 10-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டம் வரையிலும், ஐடிஐ சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் டிப்ளமோ நர்சிங், நர்சிங், பிசியோதெரபி படித்தவர்கள் இதில் கலந்து கொண்டு தகுதிக்கேற்ப தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் பெறலாம். இதற்காக வேலை தேடுவோர் மற்றும் தனியார் நிறுவனங்கள் வேலைநாடுநர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in இணைய தளத்தில் சுயவிவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் கல்விச்சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (12-ந் தேதி) காலை 10 மணிக்கு மதுரை புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு வரவேண்டும். தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலகப்பதிவு பாதிக்கப்படாது" என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com