search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு
    X

    கோப்புபடம்.

    வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

    • 19 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    • 3 மாதங்களுக்கான எம்.எஸ்.ஆபிஸ் சான்றிதழுடன் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக அவினாசி, குடிமங்கலம், காங்கயம், குண்டடம், பல்லடம், பொங்கலூர், திருப்பூர், உடுமலை, ஊத்துக்குளி, வெள்ளகோவில் ஆகிய வட்டாரங்களில் உள்ள 19 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூடிய குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கான எம்.எஸ்.ஆபிஸ் சான்றிதழுடன் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 வருடம் இதே போன்ற திட்டங்களில் பணிபுரிந்திருக்க வேண்டும். முன் அனுபவம் குறிப்பிட்டுள்ள காலத்தில் நற்பணியாற்றியிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டாரத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். வருகிற 6-ந் தேதி எழுத்துத்தேர்வும், 9-ந் தேதி நேர்முகத்தேர்வும் நடககும். தகுதி வாய்ந்தவர்கள் இணை இயக்குனர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், எண்.42, கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் 641 601 என்ற முகவரிக்கு வருகிற 22-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.

    Next Story
    ×