உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம்

Published On 2022-06-28 05:39 GMT   |   Update On 2022-06-28 05:39 GMT
  • திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம் ஆண்டிபட்டி மற்றும் சின்னமனூரில் நடைபெறுகிறது.
  • இளைஞர் அணி, மாணவர் அணியினர் வெண்சீறுடை அணிந்து கூட்டத்தில் கலந்துகொள்ள அறிவுத்தல்

உத்தமபாளையம்:

தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை ஆண்டிபட்டி மற்றும் சின்னமனூரில் நடைபெறுகிறது. இதுகுறித்து தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன்.எம்.எல்.ஏ., விடுத்துள்ள அறிக்கையில்,

பெரியார், அண்ணா, முன்னாள் முதல்-அைமச்சர் கலைஞர் ஆகியோர்கள் வகுத்துக் கொடுத்த திராவிடக் கொள்கை மற்றும் செயல்பாடுகளை இன்றைய திராவிட தலைமுறை இளைஞர்கள், மாணவர்கள் அறிந்து, அதன்படி எதிர்காலத்தில் திராவிட கொள்கையால் தமிழகத்தையும், தமிழக மக்களையும் எவ்வாறு திராவிட உணர்வோடு வழிநடத்திச் சென்று அரசியல் பயணத்தை தொடர்ந்திட ஏதுவாக, அந்தந்த மாவட்ட அமைப்புகளால் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடத்திட தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று செவ்வாய்கிழமை, காலை 10 மணிக்கு ஆண்டிபட்டி விக்னேஸ்வரா திருமண மஹாலிலும், மாலை 4 மணிக்கு சின்னமனூர் அழகுசீனிவாசன் திருமண மஹாலிலும் மாவட்ட பொறுப்பாளர் தலைமையில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் பாஸ்கரன் வரவேற்புரை ஆற்றிடவும், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வேந்திரன், மாநில தீர்மானக்குழு இணை செயலாளர் ஜெயக்குமார், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாண்டியன் மற்றும் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன் முன்னிலையிலும் திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் தமிழக அரசு தலைமை கொறடா முனைவர் செழியன்,எம்.எல்.ஏ., செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். எனவே, தேனி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், சிளை நிர்வாகிகள், இளைஞரணி, மாணவரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தொ.மு.ச. நிர்வாகிகள், ஆகியோர் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தவராமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும், இளைஞர் அணி, மாணவர் அணியினர் வெண்சீறுடை அணிந்து கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News