உள்ளூர் செய்திகள்

பழனி முருகன் கோவில்

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக கவசம் கட்டாயம்

Update: 2022-06-27 22:07 GMT
  • கொரோனா பரவல் அதிகரிப்பை அடுத்து பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது
  • கோவிலின் நுழைவு வாயில் பகுதியில் பக்தர்களுக்கு முக கவசம் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. மேலும் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகம் இருந்த போது, அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பரவல் குறைந்ததை அடுத்து அந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இந்த நிலையில் தற்போது மீண்டும் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முககவசம் அணிந்து வர வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவிலின் நுழைவு வாயில் பகுதியில் பக்தர்களுக்கு முககவசம் இலவசமாக வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News