உள்ளூர் செய்திகள்

வாகனத்தை சிறைபிடித்து போராடிய பொதுமக்கள்.

இழப்பீடு வழங்காமல் வீடு இடிப்பு பொதுமக்கள் போராட்டம்

Published On 2022-06-25 08:47 GMT   |   Update On 2022-06-25 08:47 GMT
  • தருமபுரி அருகே 6 வழி சாலை அமைக்கும் பணிக்கு முன்னறிவிப்பு ஏதுமின்றி வீடு மற்றும் தொழிற்சாலை இடிக்கப்பட்டது.
  • இதனால் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து, தருமபுரி மாவட்டம் தடங்கம் வரை 6 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான நில எடுப்பு பணி மற்றும் நிலத்திற்கான பணம் வழங்காததால் முறையாக முடிக்கப்படவில்லை என அதிகாரிகளை கண்டித்து மக்கள் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தருமபுரியை அடுத்த சோகத்தூர் பகுதியில் நேற்று சாலை அமைக்கும் பணிக்கு வீடு, கடை மற்றும் அலுமினியம் பாத்திரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஆகியவற்றை பணியாளர்கள் இடித்தனர்.

நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காமலும், முன்னறிவிப்பு ஏதுமின்றி இவற்றை இடித்ததால் பொக்லைன் வாகனத்தை மக்கள் சிறைபிடித்து போராட்டம் செய்தனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். இதனால் அப்பகுதியில் சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News