உள்ளூர் செய்திகள்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ள பள்ளத்தை படத்தில் காணலாம்.

திண்டுக்கல்லில் அங்கன்வாடி மையம் அருகே ஆபத்தான பள்ளம்

Published On 2022-10-07 08:09 GMT   |   Update On 2022-10-07 08:09 GMT
  • திண்டுக்கல்-நத்தம் ரோடு குடகனாறு இல்லம் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
  • அங்கன்வாடி மையம் அருகே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் அங்கு வரும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல்-நத்தம் ரோடு குடகனாறு இல்லம் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. பர்மா காலனி மற்றும் அதன்சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த சுமார் 20 குழந்தைகள் இங்கு வந்து செல்கின்றனர்.

மையத்திற்கு வரும் வழியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. அதற்காக ேதாண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது.

அதில் தண்ணீர் தேங்கி தற்போது சுகாதார சீர்கே டான நிலையில் உள்ளது. டெங்கு அச்சுறுத்தல் காரணமாக சுகாதாரத்துறை யினர் பல்வேறு நடவடிக்கை கள் எடுத்துவரும் நிலையில் அங்கன்வாடி மையம் அருகே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் அங்கு வரும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே இதனை சீரமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News