உள்ளூர் செய்திகள்

பாளை நான்கு வழிச்சாலையில் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி சமையல் மாஸ்டர் பலி

Update: 2022-06-25 10:14 GMT
  • பொட்டல் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதியது.
  • மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

செய்துங்கநல்லூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 45). சமையல் மாஸ்டர். இவர் நேற்று பாளையை அடுத்த கீழநத்தம் பகுதிக்கு ஒரு துக்க வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். நான்கு வழி சாலையில் பாளையை அடுத்த பொட்டல் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதியது.

இதில் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முத்துவை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News