வாசுதேவநல்லூர் பகுதியில் கலெக்டர் ஆய்வு
- கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பதவி யேற்ற பின்னர் முதன்முறையாக சிவகிரி தாலுகா அலுவலகத்திற்கு நேற்று வருகை தந்தார்.
- கலெக்டர் துரை ரவிச்சந்திரனிடம் தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், செயல் அலுவலர் மோகன மாரியம்மாள் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.
சிவகிரி:
தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச் சந்திரன் பதவி யேற்ற பின்னர் முதன்முறையாக சிவகிரி தாலுகா அலுவ லகத்திற்கு நேற்று வருகை தந்தார். அவருக்கு சிவகிரி தாசில்தார் பழனிச்சாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவகிரி தாலுகா அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள நகரம், முள்ளிக்குளம், இராமசாமியாபுரம், நெல்கட்டும்செவல் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிகள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட பணிகள், 15 -வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் உள்ள பணிகள், ஒருங்கிணைந்த பணி மேம்பாட்டு திட்ட பணிகள், அனைத்திந்திய அண்ணா மறுமலர்ச்சி திட்ட மானிய பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலகம், வாசுதேவநல்லூர் பேரூராட்சி அலுவலகம் ஆகியவற்றிற்கு வருகை தந்து ஆய்வு செய்தார். வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்க வேண்டியும், பேரூராட்சியை சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டியும் கலெக்டர் துரை ரவிச்சந்திரனிடம் தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், செயல் அலுவலர் மோகன மாரியம்மாள் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.
நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர்கள் ஜெயராமன், கருப்பசாமி, பொறியாளர் அருள்நா ராயணன், பணி பார்வை யாளர் முத்துமாரி, நியமன குழு உறுப்பினர் முனீஸ், கவுன்சிலர் சரவ ணன், சிவகிரி தாசில்தார் பழனிச்சாமி, துணை தாசில்தார் சரவணன், மணிகண்டன், கணேசன், வருவாய் ஆய்வாளர் சர வண குமார், கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.