உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணர், ராதை வேடத்தில் குழந்தைகள்.

கோகுலாஷ்டமியை முன்னிட்டு கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்த குழந்தைகள்

Published On 2022-08-18 07:39 GMT   |   Update On 2022-08-18 07:39 GMT
  • கிருஷ்ணஜெயந்தி நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் திண்டுக்கல்லில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
  • 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடமணிந்து கோவிலுக்கு வந்தனர்.

திண்டுக்கல்:

கிருஷ்ணஜெயந்தி நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் திண்டுக்கல்லில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. கிருஷ்ணஜெயந்திஅன்று வீடுகளில் சிலைகளை வைத்து வழிபடுவதும், குழந்தைகளின் கால்தடங்களை பதியவிட்டு வழிபடுவதும், குழந்தைகளுக்கு பிடித்த திண்பண்டங்கள் தயார் செய்து அனைவருக்கும் வழங்குவது வழக்கமாகும்.

மேலும் தங்கள் வீட்டு குழந்தைகளை கிருஷ்ணர் வேடமிட்டு அழைத்து வருவதும் வழக்கமாக இருந்து வருகிறது. திண்டுக்கல்லில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு தவழும் கண்ணன், வெண்ணை கண்ணன், பசுகண்ணன் உள்ளிட்ட விதவிதமான சிலைகள் விற்பனைக்கு வந்தது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.

இதேபோல திண்டுக்கல் கே.ஆர்.நகர் ரூபகிருஷ்ணன் கோவிலில் இன்று முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாைவ முன்னிட்டு அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடமணிந்து கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் வளாகத்தில் கிருஷ்ணனின் பாடல்களை பாடியவாறு ஆடி, பாடி மகிழ்ந்தனர். அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டதுடன் பரிசுகளும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News