உள்ளூர் செய்திகள்

விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே. மணி, எஸ்.பி வெங்கடேஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

பஸ்-லாரி மோதல்: விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் நேரில் சென்று ஆறுதல்

Published On 2022-08-18 10:02 GMT   |   Update On 2022-08-18 10:02 GMT
  • இதில் ஓட்டுநர் உள்பட 18 பேர் காயமடைந்தனர்.
  • மருத்துவர்களை அழைத்து உடனுக்குடன் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க வலியுறுத்தினர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த பிக்கிலி கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 10 பஸ்களில் ராமேஸ்வரம் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தபோது தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே ஒரு பேருந்து மட்டும் முன்னால் சென்ற லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் உள்பட 18 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை பென்னாகரம் எம்.எல்.ஏ ஜி.கே.மணி, தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன், நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

பின்னர் மருத்துவர்களை அழைத்து உடனுக்குடன் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க வலியுறுத்தினர். உடன் நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் பெரியசாமி, கல்லூரி முதல்வர் அமுதவல்லி, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், உடன் இருந்தனர்.

Similar News