உள்ளூர் செய்திகள்

நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய வாகனம் நிறுத்தம் பகுதியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிர சோதனை நடத்திய காட்சி.

நெல்லை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை

Published On 2022-12-05 09:36 GMT   |   Update On 2022-12-05 09:36 GMT
  • பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் போலீசார் முக்கிய இடங்களில் தீவிர சோதனை நடத்தி பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
  • நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் மாநகர பகுதிகளின் முக்கிய இடங்களில் வெடிகுண்டு பிரிவு போலீசார் அதிரடி சோதனை

நெல்லை:

பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் போலீசார் முக்கிய இடங்களில் தீவிர சோதனை நடத்தி பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

ரெயில் நிலையம்

இந்நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் மாநகர பகுதிகளின் முக்கிய இடங்களில் வெடிகுண்டு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருப்புப் பாதை இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் ஜான், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் தலைமையில் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான போலீசார் ரெயில்வே தண்டவாளம்,ரெயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் ஆகியவையில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு உபகரணங்கள் மற்றும் அதிநவீன கருவிகளுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து ரெயில்வே பார்சல் சர்வீஸ் அலுவலகம், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தம் உள்ளிட்ட இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. நீண்ட நாட்களாக கேட்பாரற்றுக் கிடக்கும் இருசக்கர வாகனங்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வாகனங்கள் முழுவதும் அதிநவீன கருவிகள் கொண்டு தணிக்கை செய்யப்பட்டது.

இதேபோல் நெல்லை மாநகர் பகுதிகளில் இருக்கும் முக்கிய அலுவலகங்கள், கோவில்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட இடங்களிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கேட்பாரற்ற நிலையில் இருக்கும் அனைத்து விதமான வாகனங்களும் தீவிர தணிக்கை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News