உள்ளூர் செய்திகள்

கொடியேற்றத்தை தொடர்ந்து கொடிமரத்திற்கு தீபாராதனை காட்டிய போது எடுத்த படம். 

நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம்

Published On 2022-08-26 09:21 GMT   |   Update On 2022-08-26 09:21 GMT
  • ஆவணி மூலத்திருவிழாவையொட்டி கோவில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
  • திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கரூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர் மானூர் அம்பலத்தில் வைத்து காட்சி கொடுக்கும் வைபவம் வருகிற 5-ந் தேதி நடைபெறுகிறது.

நெல்லை:

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோவில் ஆவணி மூலத் திருவிழா இன்று தொடங்கியது.

இதையொட்டி கோவில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கொடிப்பட்டம் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொடிப்பட்டதிற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

பின்னர் சுவாமி சன்னதி உட்பிரகாரத் தில் அமைந்துள்ள கொடி மரத்தில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

பின்னர் கொடி மரத்திற்கு 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் மகாதீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கரூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர் மானூர் அம்பலத்தில் வைத்து காட்சி கொடுக்கும் வைபவம் வருகிற 5-ந் தேதி நடைபெறுகிறது.

Tags:    

Similar News