உள்ளூர் செய்திகள்

இரும்பு வியாபாரி மீது தாக்குதல் தந்தை, மகன் கைது

Published On 2022-07-26 10:11 GMT   |   Update On 2022-07-26 10:11 GMT
  • மணியனூர் பகுதியில் உள்ள தனது உறவினரை பார்க்க நேற்று மணியனூர் சந்தை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
  • உங்களை எங்கேயோ பார்த்தது போல உள்ளது என கூறி இரு தரப்பினரும் பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென இருதரப்பினரும் தகாத வார்த்தைகளால் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டு திடீரென சரமாரியாக தாக்கிக் கொண்டதாக தெரிகிறது.

அன்னதானப்பட்டி:

சேலம் பொன்னம்மாப்பேட்டை புத்து மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 53). பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள், தட்டு முட்டு சாமான்கள் வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவர் மணியனூர் பகுதியில் உள்ள தனது உறவினரை பார்க்க நேற்று மணியனூர் சந்தை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் சீனிவாசனிடம் அறிமுகமாகி ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நலம் விசாரித்து ஏற்கனவே உங்களை எங்கேயோ பார்த்தது போல உள்ளது என கூறி இரு தரப்பினரும் பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென இருதரப்பினரும் தகாத வார்த்தைகளால் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டு திடீரென சரமாரியாக தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதில் சீனிவாசன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அடிதடி பிரிவில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் மணியனூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி ( 52), அவரது மகன் பிரகாஷ் (30) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தப்பி ஓடிய கார்த்திக் என்பவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News