உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

ஒற்றை தலைமை பிரச்சினையால் நகராட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாத அ.தி.மு.க

Published On 2022-06-28 04:52 GMT   |   Update On 2022-06-28 04:57 GMT
  • அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை பிரச்சினையால் கட்சியில் இருந்து விண்ணப்பபடிவம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
  • அனைத்து பதவிகளுக்கும் வருகிற ஜூலை 9-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

பெரியகுளம்:

ஒற்றைதலைமை பிரச்சினையால் பெரியகுளம் நகராட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை.

பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் உள்ள 30 வார்டுகளில் தி.மு.க 14, அ.தி.மு.க 7, அ.ம.மு.க 3, சுயேட்சைகள் 2, இந்திய யூனியன்முஸ்லீம் லீக், மார்க்சிஸ்ட், பார்வர்டு பிளாக், பா.ம.க ஆகியவை தலா 1 என கவுன்சிலர்கள் வெற்றிபெற்றனர். இதில் 26-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் ராஜாமுகமது தலைைமயின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதற்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. தி.மு.க சார்பில் ஜியாவுதீன்அக்பர் மற்றும் சுயேட்சைகள் 4 என மொத்தம் 5 பேர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர். அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை பிரச்சினையால் கட்சியில் இருந்து விண்ணப்பபடிவம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே கடந்த தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஜெயினுலாபுதீன் தற்போது சுயேட்சையாக வேட்புமனுதாக்கல் செய்துள்ளார். தேனி மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள வடபுதுப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 13 பேர், டி.வாடிப்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர், வடபுதுப்பட்டி மொட்டனூத்து ரெங்கசமுத்திரம், முத்தாலம்பாறை, தும்மக்குண்டு ஆகிய ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிக்கு தலா ஒருவர், சின்னஓவுலாபுரம் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர் என மொத்தம் 28 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்களின் மீது பரிசீலனை இன்று நடைபெறுகிறது. வருகிற 30-ந்தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். அனைத்து பதவிகளுக்கும் வருகிற ஜூலை 9-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. வடபுதுப்பட்டி, மொட்டனூத்து, ரெங்கசமுத்திரம், முத்தலாம்பாறை, தும்மக்குண்டு ஆகிய ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளதால் அங்கு அவர்கள் போட்டியின்றி தேர்வாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News