உள்ளூர் செய்திகள்

சிமெண்ட் தளம் அமைக்கும் பணியை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 

ஏர்ரபட்டியில் ரூ.4.30 லட்சம் மதிப்பில் சிமெண்ட் தளம்

Published On 2023-02-08 10:04 GMT   |   Update On 2023-02-08 10:04 GMT
  • நீண்ட நாள் கோரிக்கையான சிமெண்ட் தளம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்தனர்.
  • சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட எர்ரப்பட்டி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிமெண்ட் தளம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்தனர்.

அதன் அடிப்படையில் ஏர்ரப்பட்டி கிராமத்தில் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து 4.30 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் அமைக்க பணி ஆனை வழங்கப்பட்டது. இன்று பணியை தொடங்க தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, ஒன்றிய கவுன்சிலர் சோனியாகாந்தி வெ ங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல், மகளிர் அணி கோவிந்தம்மாள், ஊர் கவுண்டர் விஜயகுமார், மந்திரி கவுண்டர் மாணிக்கம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், மாணிக்கம் பால்வளத்துறை வேணுகோபால் துரைசாமி, சிவச்சந்திரன், கண்ணதாசன், கார்த்திக், சிவா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News