உள்ளூர் செய்திகள்
வெற்றி பெற்ற மாணவனுக்கு பரிசு வழங்கப்பட்டது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா

Published On 2022-06-02 09:14 GMT   |   Update On 2022-06-02 09:14 GMT
திருத்துறைப்பூண்டி அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.
திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே கொறுக்கை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. இயந்திரவியல் துறை தலைவர் தியாகராஜன் வரவேற்றார், கல்லூரி முதல்வர் காசி தலைமை வகித்தார்.

எம்எல்ஏ மாரிமுத்து, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், கொருக்கை ஊராட்சி தலைவர் ஜானகிராமன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினர்.காரைக்கால் அகில இந்திய வானொலி நிலைய அறிவிப்பாளர் அன்பழகன் வாழ்த்துரை வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் முனைவர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News