உள்ளூர் செய்திகள்
காட்டுப்பன்றிகள் சேதப்படுத்திய வயல்.

நாற்றங்கால் மற்றும் பருத்தி செடிகளை காட்டுப்பன்றிகள் அழித்து அட்டூழியம் - விவசாயிகள் வேதனை

Published On 2022-06-01 09:13 GMT   |   Update On 2022-06-01 09:13 GMT
வலங்கைமான் பகுதிகளில் நாற்றங்கால் மற்றும் பருத்தி செடிகளை காட்டுப்பன்றிகள் அழித்து அட்டூழியம் செய்துவருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் வீரமங்கலம், வேலங்குடி, படப் பைகுடி, வீராணம், மணலுர், உள்ளிட்ட வெட்டாறை ஒட்டிய கிராமங்களில் உள்ள வயல்களில் நாற்றங்கால் மற்றும் பருத்தி செடிகளை  காட்டுப்பன்றிகள்அழித்து அட்டூழியம் செய்துவருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, வீரமங்க லத்தைச் சேர்ந்த சந்திரமோகன் என்ற விவசாயி கூறுகையில்:-

நாற்றங்கால்கள் அமைத்து அது நெற் பயிராக வளரும் வரை குழந்தையைப் போன்று கூடவே இருந்து பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் கடந்த சில நாட்களாகவே காட்டுப்பன்றிகள் அருகிலுள்ள வெட்டாறில்  புதர்கள் மண்டி உள்ளன, அதில் காட்டுப் பன்றிகள் மறைந்து கொண்டு இரவு நேரங்களில் வெளி வந்து நெற்பயிர்களையும், நாற்றங்கால் களையும் நாசமாக்கி வருவதாக அவர் கூறினார்.

வயலை சுற்றியும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இரவு முழுவதும் கண்வி ழித்து வருகிறேன் ஆனாலும் ஒரு சில நாட்கள் கண்காணிப்பில் ஈடு படாமல் விட்டு விட்டால், அந்தப் பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்து விடுகின்றன. அருகிலுள்ள  கிராமத்தில் வேட்டை நாய்களை கொண்டு ஒரு காட்டுப்பன்றியை  பிடித்துள்ளனர். 

இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் இல்லையெனில்வரும் காலங்களில் காட்டுப்ப ன்றிகள் அதிகம் பெருகி வயல் முழுவதையுமே நாசமாக்கி உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாய சூழல் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுவரை பத்தாயிரம் ரூபாய் செலவு செய்து ள்ளேன், இனி விதைநெல் வாங்குவதற்கு கூட என்னிடம் பணம் இல்லை ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார்.

Tags:    

Similar News