உள்ளூர் செய்திகள்
.

தருமபுரியில் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2022-05-28 09:54 GMT   |   Update On 2022-05-28 09:54 GMT
தருமபுரியில் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை ெசய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இந்த நிலையில் எலி மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அதை மீறி  திருட்டுதனமாக விற்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இது குறித்து மளிகை கடைகாரர்கள் சிலர் கூறும்போது:- எலிமருந்து மற்றும் சாணிபவுடர் போன்றவற்றை அரசு தடை செய்திருந்தாலும் அதையும் மீறி சிலர் இவற்றை விற்று வருகின்றனர்.
இதை பயன்படுத்தி க்கொண்டு பலர் விபரீத முயற்சிகளில் ஈடுபட்டு உயிரை மாய்த்து கொள்கின்றனர். முன்பு கிராம பகுதிகளில் இருந்து வந்த தற்கொலைகளின் எண்ணிக்கை தற்போது நகர பகுதிகளிலும் அதிகரித்து வருகிறது.

இது குறித்து அரசு மருத்து வமனை மருத்துவர்கள் கூறுகையில் சாதாரண காரணத்திற்காக கூட தற்கொலை செய்து கொள்வது தற்போது அதிகரித்து வருகிறது. 
மனநிலை பாதிக்க ப்பட்ட வர்களுக்கு தருவது போல தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு கவுன்சிலிங் தருவது எளி தான காரியம் இல்லை. ஏனென்றால் அவர்களை கண்டறிவது கடினம்.
அவர்களுக்கு எலி மருந்து போன்றவை எளிதாக கிடைக்கிறது. இதற்கு அதிகாரிகள்தான் தீர்வு காண முடியும். 

மளிகை கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தி திருட்டுத்தனமாக எலி மருந்து போன்றவற்றை விற்க கடிவாளம் போட வேண்டும்.
லாபம் மட்டுமே நோக்கமாக கொள்ளாமல் விற்பனையாளர்களும் நடந்து கொள்ள வேண்டும் .இவ்வாறு அவர்கள் கூறினர். 
எது எப்படியோ மனித உயிர் விலை மதி ப்பில்லாதது என்பதை தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்படுவோர் சிந்தித்து பார்க்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Tags:    

Similar News