உள்ளூர் செய்திகள்
சுற்றுலா பயணிகள் பாலத்தில் நடந்து செல்லும் காட்சி

மாத்தூர் தொட்டில் பாலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

Published On 2022-05-28 09:13 GMT   |   Update On 2022-05-28 09:13 GMT
மாத்தூர் தொட்டில் பாலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
கன்னியாகுமரி, மே.28-

குமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று மாத்தூர் தொட்டில்பாலம். இது காமராஜர் ஆட்சி காலத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்க்காக இரண்டு மலைகளை இனைத்து கட்டப்பட்ட பாலமாகும் இதன் கீழ் பகுதியில் பரளியாறு 
பாய்கிறது. 

தற்போது கோடை காலம் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் தமிழகம் மற்றும் கேராளாலிருந்தும் தினமும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. 

சுற்றுலா பயணிகள் பாலத்தின் மேல் பகுதியில் நடந்து சென்று பார்த்து அழகை ரசிக்கிறார்கள். தற்போது பெய்த மழையினால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 

இங்கு சுற்றுலா பயணிகள் குளித்து விட்டு படகு சவாரியும் செய்கிறார்கள். சனி, ஞாயிறு 2 நாள் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News