உள்ளூர் செய்திகள்
கூடலழகர் பெருமாள் கோவில் தெரு முன்பு குளம்போல் தேங்கி நிற்கும் கழிவு நீர்.

தெப்பம் போல் நிறைந்திருக்கும் கழிவுநீர்

Published On 2022-05-28 08:00 GMT   |   Update On 2022-05-28 08:00 GMT
மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் தெருவில் கழிவுநீர் தெப்பம் போல் நிறைந்திருக்கிறது.
மதுரை

மதுரை நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற கூடலழகர் பெருமாள் கோவில் உள்ளது. வைணவத் தலங்களில் ஒன்றான இக்கோவிலுக்கு சனி மற்றும் விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் கூடுவார்கள். மேலும் முகூர்த்த நாட்களில் அதிக அளவில் இக்கோவிலில் திருமணங்கள் நடைபெறுகின்றன.

இக்கோவில் அமைந்து ள்ள கூடலழகர் பெருமாள் கோவில் தெருவில் வாகனம் நிறுத்தும் இடமும் அமைந்துள்ளது. இதனால் இந்தக் கோவில் தெருவை தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

இந்த கோவில் அமைந்துள்ள தெருவில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவது தொடர்ந்து வருகிறது. இதனால் கோவில் தெருவின் தொடக்கத்தில் கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதால் இந்த வழியாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்லவே தயக்கம் காட்டுகின்றனர்.

பலமாதங்களாக இதே நிலை நீடித்து வருகிறது. ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர்.

எனவே கோவிலுக்கு செல்லும் இந்தப் பாதையில் கழிவு நீர் தேங்குவதை தடுத்து நிறுத்தி சுகாதாரமான முறையில் பேணி காக்க வேண்டும் என பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News