search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருமாள் கோவில்"

    • தருமபுரி அருகே திம்மராய பெருமாள் கோவிலில் மணியை திருடி சென்ற திருடன்
    • சி.சி.டிவி. பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை

    தருமபுரி அருகே உள்ள சோகத்தூரில் திம்மராய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலை வழக்கம்போல் நேற்று முன்தினம் பூசாரி பூஜை முடித்து விட்டு பூட்டிவிட்டு சென்று விட்டார். மீண்டும் கோவிலை திறக்க நேற்று காலை வந்து கோவிலுக்கு வந்தார்.

    அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்த நிலையில் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பூசாரி ஊர் பொதுமக்களிடம் தகவல் கூறினார். இதனை அடுத்து கிராம நிர்வாகிகள், பொதுமக்கள் வந்து கோவிலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை பார்த்தபோது கோவிலில் அதிகாலை புகுந்த திருடன் கோவில் கேட்டின் பூட்டை உடைத்து உண்டியலை உடைக்க முயன்றுள்ளான்.

    உண்டியலை உடைக்க முடியாத நிலையில் ஆத்திரமடைந்த திருடன் வந்ததற்கு ஏதாவது எடுத்துச் செல்ல வேண்டும் என்று நோக்கத்தில் சாவகாசமாக கோவிலில் இருந்த தீபாராதனை தட்டு, தீர்த்தவட்டல், சடாரி, மணி, மற்றும் உற்சவர் வைக்கும் செம்புத்தகடு ஆகிய பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    மேலும் கோவிலில் சி.சி.டி.வி., இருப்பது கூட தெரியாததால் பதற்றமில்லாமல் பூட்டை உடைத்து கோயிலில் உள்ள பொருட்களை திருடி செல்கின்ற வீடியோ வெளியாகி உள்ளன. கோவில் திருட்டு சம்பவம் குறித்து தருமபுரி நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • இந்து தர்ம பேரவை தமிழக அரசுக்கு மனு
    • ஒரு வேளை பூஜை கூட சரியாக நடைபெறவில்லை என்று பக்தர்கள் வேதனை

    இரணியல் :

    குமரி மாவட்டம் வில்லுகுறி அருகே மாம்பழத்துறையாறு அணையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆலச்சுவடி என்னும் பகுதியில் 164 சென்ட் நிலப்பரப்பில் மலையாண்ட பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இது மன்னர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோவில் ஆகும். இந்த கோவில் இப்போது அறநிலையத்துறையை கட்டுபாட்டில் உள்ளது. ஆனால் இங்கு ஒரு வேளை பூஜை கூட சரியாக நடைபெறவில்லை என்று பக்தர்கள் வேதனை அடைகின்றனர்.

    மிகவும் பழமையான இந்தக் கோவில் மற்றும் கோபுரங்கள் இடியும் தருவாயில் உள்ளதால் அதனை புனரமைப்பு செய்ய வேண்டும். இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலயத்தை திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தி குமரி மாவட்டம் மட்டும் இல்லாமல் வெளி மாவட்டம் மற்றும் மாநில பக்தர்களும் இங்கு வந்து சாமி தரிசனம் செய்ய வழிவகைகள் செய்து தர வேண்டும். மேலும் ஆலயத்திற்கு சொந்தமான நிலங்கள் இருந்தால் அதையும் மீட்டு எடுக்க வேண்டும் என ஹிந்து தர்ம பேரவை வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அரசுக்கும் அறநிலையத்துறைக்கும் மனு அனுப்பி உள்ளது.

    • சா்ப்ப விநாயகா் விற்றிருக்கும் தலமாகவும் தாளக்கரை லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோவில் விளங்குகிறது.
    • சனிக்கிழமை தொடங்கப்பட்டு வாரந்தோறும் சிறப்பு பூஜைகள், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் சுவாமி திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெற்றன

    அவிநாசி:

    பழமை வாய்ந்ததும், திருப்பூா் மாவட்டத்திலேயே தனி சன்னிதியாய் நரசிம்மருக்கு இடதுபுறம் மகாலட்சுமி நின்ற நிலையில் அருள்பாலிக்கும் சிறப்புக்குரியதும், சா்ப்ப விநாயகா் விற்றிருக்கும் தலமாகவும் தாளக்கரை லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோவில் விளங்குகிறது. இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள இக்கோவிலில் புரட்டாசி திருவிழா செப்டம்பா் 23-ந் தேதி தொடங்கி 5 வார சனிக்கிழமைகளிலும் ஒவ்வோரு வாரம் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமத்தினா் உபயதாரா்களாக பங்கேற்று சிறப்பு பூஜைகளும், இரவு உற்சவமும் நடைபெற்றது.

    இதேபோல மேலத் திருப்பதி எனப் போற்றப்படும், சேவூா் அருகேயுள்ள மொண்டிபாளையம் பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா செப்டம்பா் 16-ந் தேதி சனிக்கிழமை தொடங்கப்பட்டு வாரந்தோறும் சிறப்பு பூஜைகள், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் சுவாமி திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெற்றன.

    இந்நிலையில் பிரசித்தி பெற்ற இரு கோவில்களிலும் இந்த வாரம் சனிக்கிழமையுடன் புரட்டாசி திருவிழா நிறைவு பெற்றது. 

    • மழைக்காலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
    • வெள்ளகோவில் நகர தி.மு.க. செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், திருப்பணி குழு உறுப்பினர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர், மகாலட்சுமி, கருடாழ்வார், விநாயகர் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இந்த கோவில் தரை மட்டத்தில் இருந்து தாழ்வான நிலையில் இருப்பதால் மழை நீர் மற்றும் கழிவு நீர் கோவில் கருவறை வரை செல்கிறது. இதனால் மழைக்காலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனால் கோவிலை புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு, கோவிலை முற்றிலும் அகற்றப்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் கோவில் கட்ட பூமி பூஜை மற்றும் கால்கோள் விழா நடைபெற்றது. கோவில் கட்டும் பணியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். இதில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ராசி கே.ஆர்.முத்துக்குமார், திருப்பணி குழு தலைவர் ஏ.எம்.சி. செல்வராஜ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், கோவில் செயல் அலுவலர் எஸ்.ராமநாதன், வெள்ளகோவில் நகர தி.மு.க. செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், திருப்பணி குழு உறுப்பினர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • பெண்கள் கூட்டம் அலைமோதியது
    • இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை

    நாகர்கோவில்,

    புரட்டாசி சனிக்கிழமை களில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி ஆனந்தம் கிடைக்கும், நினைத்த காரி யங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.

    இதனால் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார் கள். புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவி லில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவிலில் இன்று காலை யில் பெருமா ளுக்கு சிறப்பு தீபாராதனை கள் நடந்தது. பெருமாளை தரிசிப்ப தற்காக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிச னம் செய்தனர். பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரி விவேகானந்தர் கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவிலி லும் இன்று காலையில் சுப்ரபாத தரிசனம், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழி பாடுகளும், தீபாராதனை களும் நடந்தது. திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலிலும் இன்று காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவிலில் காலை முதலே பக்தர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

    திருப்பதி சாரம் திருவாழ் மார்பன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், சுசீந்திரம் துவா ரகை கிருஷ்ணன் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ண சாமி கோவில், கோட்டார் வாகையடி தெருவில் உள்ள ஏழாகரம் பெருமாள் கோவில், வட்ட விளை தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று காலையில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடந்தது.

    பெருமாளை தரிசிப்பதற்காக காலை முதலே பக்தர்கள் கூட்டம் கோவில் களில் நிரம்பி வழிந்தது.

    • மாலை 6.30 மணிக்கு சேஷ வாகனத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
    • பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான 23-ந் தேதி காலை சக்ரஸ்நானம் நடக்கிறது. அன்று மாலை 6.30 மணிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

    சென்னை:

    தி.நகர் வெங்கட் நாராயண சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.

    திருமலையில் நடப்பது போல இந்த கோவிலிலும் ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் விமரிசையாக நடத்தப்படும். இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் வரும் 15-ந் தேதி தொடங்குகிறது.

    அன்று மாலை 6.30 மணிக்கு சேஷ வாகனத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். அடுத்தநாள் ஹம்சவாசனத்திலும், 17-ந் தேதி முத்து பந்தலிலும் 15-ந் தேதி கல்ப விருட்சத்திலும் உலா வருகிறார். வரும் 19ந் தேதி இரவு 7 மணிக்கு கருட சேவை உற்சவம் நடக்கிறது. 20-ந்தேதி காலை 9 மணிக்கு ஹனுமந்த வாகனத்திலும் மாலை 6.30 மணிக்கு கஜ வாகன புறப்பாடும் நடக்கிறது.

    வரும் 21-ந் தேதி காலை சூரிய பிரபையிலும், மாலை சந்திர பிரபையிலும் உலா வருகிறார். அஷ்வ வாகனத்தில், 22-ந் தேதி மாலை 6.30 மணிக்கு வலம் வந்து பெருமாள் அருள்பாலிக்கிறார். பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான 23-ந் தேதி காலை சக்ரஸ்நானம் நடக்கிறது. அன்று மாலை 6.30 மணிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

    இந்த தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக, புதுச்சேரி ஆலோசனைக்குழு தலைவர் சேகர் தெரிவித்தார். இக்கோவிலில் 3 நாட்களாக நடந்த பவித்ர உற்சவம் நேற்றுடன் முடிந்தது.

    • பெருமாளுக்கு துளசி மாலைகளும், வண்ண மலர்களையும் பக்தர்கள் அணிவித்தனர்.
    • தொடர்ந்து பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள பெருமாள் மலை மீது குடி கொண்ட ஸ்ரீதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத வழிபாடு நடந்து வருகிறது. இந்நிலையில் 3-வது சனிக்கிழமை விழா வெகு சிறப்பாக நடந்தது. இதையொட்டி பெருமாளுக்கு துளசி மாலைகளும், வண்ண மலர்களையும் பக்தர்கள் அணிவித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபாடு செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது. முடிவில் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காங்கயம் நண்பர்கள் அன்னதான கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. 

    • கல்யாண வரதராஜ பெருமாளுக்கு வெண்பட்டாடை உடுத்தி ராஜ அலங்காரம் செய்யப்பட்டு 7 நிறங்களில் விஷேச புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    • பவழ வண்ண பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவி தாயார் ஆண்டாள் நாச்சியாருக்கு 20 கிலோ எடையிலான லவங்கம் மாலை அணிவிக்கப்பட்டது.

    திருவொற்றியூர்:

    சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி இன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

    திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் மிகவும் பழமையான கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.2 கோடி செலவில் புனரமைக்கப் பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலில் புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையான இன்று மூலவர் கல்யாண வரதராஜ பெருமாளுக்கு வெண்பட்டாடை உடுத்தி ராஜ அலங்காரம் செய்யப்பட்டு 7 நிறங்களில் விஷேச புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதனையடுத்து உற்சவர் பவழ வண்ண பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவி தாயார் ஆண்டாள் நாச்சியாருக்கு 20 கிலோ எடையிலான வாசனை நிறைந்த, லவங்கம் மற்றும் அலங்கார பொருட்கள் கொண்டு தயாரிக்கபட்ட மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் ஜடை, கிரீடங்கள் அணிந்து பிரமாண்ட அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இந்த கோவிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் விதவிதமான மலர்கள், பழங்கள் என மாலை அணிவித்து பெருமாளுக்கு அலங்காரம் செய்வதால் வெளிப்பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையான இன்று அதிகாலை 4.30 மணிக்கே நடை திறக்கப்பட்டது. இதனால் காலை முதலே சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்கள்.

    சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக குவிந்தனர். அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டதால் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். காலையிலேயே ஏராளமான பக்தர்கள் வந்ததால் சாலை வரை பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இதே போல் புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவில், வளசரவாக்கம் பெருமாள் கோவில் என அனைத்து பெருமாள் கோவில்களிலுமே பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

    • ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தான் ஜெனகநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முதல் வார சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஜெனக நாராயண பெருமாளுக்கு 21 திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையிலும் சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடந்தது.

    இதேபோல் அரசு பஸ் பணிமனை அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சனீஸ்வர பகவான் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.திரவுபதி அம்மன் கோவிலில் உள்ள மகா விஷ்ணுவிற்கு பால், தயிர் உள்பட 12 பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனி வாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

    • தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • புரசைவாக்கம் வெள்ளாளல் தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் மூலவருக்கு புஷ்ப அங்கி சேவை நடைபெற்றது.

    சென்னை:

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். பெருமாளை வழிபடுபவர்கள் சனிக்கிழமைகளில் விரதமிருந்து வணங்குவார்கள்.

    அதிலும் புரட்டாசி சனிக்கிழமைகள் பெருமாளுக்கு கூடுதல் விசேஷமாகும். அதிலும் இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர். இதையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

    புரசைவாக்கம் வெள்ளாளல் தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் மூலவருக்கு புஷ்ப அங்கி சேவை நடைபெற்றது. கருட வாகனத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பங்கேற்ற பக்தர்கள் கோவிந்தா.... கோவிந்தா... என கோஷம் எழுப்பி வழிபட்டனர். கோவில் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கங்காதரன் செய்திருந்தார்.

    இதேபோன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் திரண்டு பெருமாளை தரிசித்தனர்.

    • புரட்டாசி முதல் சனிக்கிழமையில் மதுரையில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டிருந்தன.

    மதுரை

    ஒவ்வொரு வருடமும் வரும் புரட்டாசி மாதம் பெருமாளை வழிபடுவதற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால் அந்த மாதத்தில் பலர் அசைவத்தை தவிர்த்து விரதம் இருப்பார்கள். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை விஷேச நாளாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் வைணவ தலங்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெறும். இதன் காரணமாக புரட்டாசி சனிக்கிழமை களில் வைணவ தலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று மதுரை நகரின் மையப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கூடலழகர் பெருமாள் கோவில் நடை இன்று அதிகாலை திறக்கப்பட்டது. மூலவர் கூடலழகர் பெரு மாள், ஸ்ரீதேவி-பூதேவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 5 மணி முதல் மதுரை நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராள மானோர் குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையையொட்டி கோவிலில் பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டிரு ந்தன.

    இதேபோல் மதுரை நகரில் உள்ள மதனகோபால சுவாமி கோவில், தெற்கு கிருஷ்ணன் பிரசன்ன வேங்கடேஸ்வர பெருமாள் கோவில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் மற்றும் ஒத்தக்கடை நரசிங்க பெருமாள் கோவில், காளமேகப் பெருமாள் கோவில், கைத்தறி நகர் பாலாஜி வெங்கடேஸ்வரர் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
    • இன்று புரட்டாசி சனிக்கிழமை

    நாகர்கோவில் :

    புரட்டாசி சனிக்கிழமை களில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி ஆனந்தம் கிடைக்கும், நினைத்த காரியம் கைக்கூடும் என்பது ஐதீகம். இதனால் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

    புரட்டாசி முதல் சனிக் கிழமையான இன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. வடி வீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவிலில் நடை திறக்கப் பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பக்தர்கள் நீண்ட வரிசை யில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். கோவி லில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்க ளுக்கு பிரசாதமும் வழங்கப் பட்டது. திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவிலி லும் இன்று அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    காலை முதலே பக்தர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

    திருப்பதிசாரம் திரு வாழ்மார்பன் கோவிலில் காலையில் பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. கன்னியாகுமரி விவே கானந்தபுரம் விவேகானந்த கேந்திர கடற்கரை வளா கத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடா ஜலபதி கோவிலில் இன்று காலை 6 மணிக்கு சுப்ரபாத தரிசனமும், அதைத் தொடர்ந்து விசேஷ பூஜை களும், சிறப்பு வழிபாடுகளும் தீபாராதனை யும் நடந்தது.

    இதில் திரளான பக்தர் கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை 5 மணிக்கு தோ மாலை சேவையும், அதைத்தொடர்ந்து சுவாமி பள்ளியறை எழுந்தருளும் நிகழ்ச்சியும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், சுசீந்தி ரம் துவாரகா கிருஷ்ணன் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ண சாமி கோவில், கோட்டார் வாகையடி தெருவில் உள்ள ஏழாகரம் பெருமாள் கோவில், வட்டவிளை தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், ஆஸ்ராமம் திருவேங்கட விண்ணகப் பெருமாள் கோவில், மகாதானபுரம் நவநீத சந்தான கோபால கிருஷ்ண சாமி கோவில், கன்னியா குமரி பால கிருஷ்ண சாமி கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    கோவிலில் பெருமாளை தரிசிப்பதற்கு காலை முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாத மும் வழங்கப்பட்டது.

    ×