உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க 2 சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு

Published On 2022-05-26 10:47 GMT   |   Update On 2022-05-26 10:47 GMT
ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க 2 சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.
வேலூர்:

வேலூர்மாவட்டம், வேலூர் கால்நடை பிரதான மருத்துவமனையில் தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் இம்மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த கள்ளச்சாராய வியாபாரிகள் மன திருந்தி தொழிலை கைவிட்டு மறுவாழ்வு பெறுவதற்காக 300-க்கும் மேற்பட்டோருக்கு கறவை மாடுகள் வழங்கும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கறவை மாடுகளும் கன்றுகளும் வழங்கப்பட்டது. விழாவில் கால்நடைத்துறை உதவி இயக்குநர் அந்துவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

பின்னர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்:-

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்கள் மனம் திருந்தி வாழ வேண்டும் என்ற நோக்கில் பசுவும் கன்றும் 300-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கும் திட்டம் தொடர்ச்சியாக இன்று வழங்குகிறோம் இதன் மூலம் மனம் திருந்தி வாழ உதவியாக இருக்கும் குரங்கு அம்மை குறித்து சுகாதாரத்துறை மூலம் கலெக்டர் கடிதம் வந்துள்ளது.

நமது மாவட்டத்தில் மருத்துவத்துறைக்கு அறிவுறுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவதாக ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் அனுப்பி இருந்தார்.

நமது வேலூர் மாவட்டத்தில் பேர்ணாம்பட்டு உள்ளிட்ட 2 இடங்களில் சோதனை சாவடி அமைத்து ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க 24 மணி நேரமும் வருவாய்த்துறை மற்றும் பலதுறைகளை ஒருங்கிணைத்து அரிசி கடத்தலை தடுக்க முழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் மூலம் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்துவது தடுக்கபடும் இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News