உள்ளூர் செய்திகள்
சென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் தீயணைப்பு துறை சார்பாக தீ தடுப்பு ஒத்திகை நடந்தது.

சென்னிமலை முருகன் கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை

Published On 2022-05-26 10:21 GMT   |   Update On 2022-05-26 10:21 GMT
சென்னிமலை முருகன் கோவிலில் தீயணைப்பு துறை சார்பாக தீ தடுப்பு ஒத்திகை நடந்தது.
சென்னிமலை:

சென்னிமலை முருகன் கோவிலில் தீயணைப்பு துறை சார்பாக தீ தடுப்பு ஒத்திகை நடந்தது.
 –
ஈரோடு மாவட்ட தீயணைப்பு மீட்பு பணித்துறை  அலுவலரின் உத்தரவுப்படி, சென்னிமலை தீயணைப்பு மீட்பு பணி நிலையம் சார்பாக சென்னிமலை முருகன் கோவிலில் பணியாற்றும் இந்து சமய அறநிலை துறை பணியாளர்களுக்கு  சென்னிமலை  முருகன் கோவில் வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. 

அவசர காலங்களில் தீ விபத்து ஏற்பட்டால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி தீயை அணைப்பது மற்றும் தீ விபத்துகள் ஏற்படாமல் எப்படி தடுப்பது போன்ற பயிற்சிகளை சென்னிமலை தீயணைப்பு நிலைய அலுவலர் துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை நடத்தி பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
Tags:    

Similar News