உள்ளூர் செய்திகள்
குடிநீர் தேக்க தொட்டி கட்ட இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டிய காட்சி.

ரூ.10½ லட்சம் மதிப்பில் குடிநீர் தேக்க தொட்டி -இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

Published On 2022-05-26 08:55 GMT   |   Update On 2022-05-26 08:55 GMT
கல்லிடைக்குறிச்சி அருகே ரூ.10½ லட்சம் மதிப்பில் குடிநீர் தேக்க தொட்டிக்கு இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
கல்லிடைக்குறிச்சி:

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொன்மாநகர் பகுதியில் அம்பை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சேரன்மகாதேவி ஒன்றியம் முலச்சி ஊராட்சியில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பொன்மாநகர் காலனி, நெசவாளர் காலனி, மீனவர் காலனி, பொன் மாநகர் புதுக்காலனி, கோல்டன் நகர் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1500 குடும்பங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு சரிசெய்யும் விதமாக ரூ.10.60 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் குடிநீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

விழாவில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குடிநீர் தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News