உள்ளூர் செய்திகள்
லாரி கவிழ்ந்ததில் சரிந்துகிடக்கும் தென்னை மட்டைகள்

டயர் வெடித்ததில் தென்னை மட்டைகளை ஏற்றி வந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

Update: 2022-05-23 05:57 GMT
நிலக்கோட்டை அருகே டயர் வெடித்ததில் தென்னை மட்டைகளை ஏற்றி வந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
நிலக்கோட்ைட:

நிலக்கோட்டை அருகே ஏ.ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன்(27). இவர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் இருந்து தென்னை மட்டைகளை வாங்கி கயிறு தொழிற்சாலைக்கு வினியோகம் செய்து வருகிறார். அதன்படி இன்று காலை அணைப்பகுதியிலிருந்து தென்னை மட்டைகளை ஏற்றிக்கொண்டு விளாம்பட்டி-மட்டப்பாறை சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது.

பாண்டியராஜபுரம் நோக்கி சென்றபோது எதிர்பாராதவிதமாக லாரி டயர் வெடித்து தலைக்குப்புற கவிழந்தது.

இதில் லாரியில் பயணம் செய்த போதுமணி, லட்சுமி, செல்வி, ரமேஷ் ஆகிய 4 பேர் காயமடைந்தனர். லாரி டிரைவர் காசிவிஸ்வநாதன் காயங்கள் இன்றி உயிர்தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News