உள்ளூர் செய்திகள்
ஆம்பூர் நகர மன்ற கூட்டத்தில் பேச வாய்ப்பு வழங்காததால் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

ஆம்பூர் நகர மன்ற கூட்டத்தில் பேச வாய்ப்பு வழங்காததால் கவுன்சிலர்கள் தர்ணா

Published On 2022-05-21 10:38 GMT   |   Update On 2022-05-21 10:38 GMT
ஆம்பூர் நகர மன்ற கூட்டத்தில் பேச வாய்ப்பு வழங்காததால் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
ஆம்பூர்:

ஆம்பூர் நகர மன்ற கூட்டம் நேற்று மாலை நகரமன்ற தலைவர் ஏஜாஸ் அகமது தலைமையில் நடைபெற்றது துணைத் தலைவர் ஆறுமுகம் நகராட்சி ஆணையர் ஷகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சொத்து வரி உயர்வு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக நகரமன்ற தலைவர் தெரிவித்தார்.
அப்போது நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு பேச வாய்ப்பு தராததை கண்டித்தும் சொத்து வரி உயர்வு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நகர மன்ற தலைவரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர்கள் நகர மன்றத் தலைவர் இருக்கைக்கு அருகில் சென்று தங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கவில்லை என்று தீர்மானத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

அப்போது 27-வது வார்டு உறுப்பினர் ஹர்ஷவர்த்தன் தனக்கு பேச வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறி தீர்மான நகலை கிழித்தெறிந்தார்.

இதை தொடர்ந்து பாஜக கவுன்சிலர் லட்சுமி பிரியா அதிமுக கவுன்சிலர்கள் தாமரைச்செல்வி ராதா வெங்கடேசன் ஜெயபால் சுயேட்சை கவுன்சிலர் அபீஸ் அஹ்மத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர் நூருல்லா உட்பட கவுன்சிலர்களுகளும் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் நகராட்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News