உள்ளூர் செய்திகள்
வத்தல் மலை வளைவு பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்கும் காட்சி.

வத்தல்மலை வளைவில் இரும்பு தடுப்பு வேலி அமைப்பு

Published On 2022-05-19 09:55 GMT   |   Update On 2022-05-19 09:55 GMT
தருமபுரி அடுத்த வத்தல்மலை கொண்டை ஊசி வளைவில் விபத்துகளை தடுக்கும் பொருட்டு இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது.
தருமபுரி,

தருமபுரி அடுத்த வத்தல் மலையில் பெரியூர், பால் சிலம்பு, உள்ளிட்ட 13 மலை கிராமங்கள் உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் இந்த வத்தல்மலை உள்ளது. 
இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் பூர்வீக குடிகளாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு சில்வர் ஓக் மரங்கள், காபி பயிர், கேழ்வரகு, நிலக்கடலை, சாமை, மிளகு, உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றனர்.

வத்தல் மலை அடிவாரத்திலிருந்து  மலைப்பாதையின் வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் மலை உச்சியை அடையலாம். அங்கிருந்து ஒவ்வொரு கிராமத்து க்கும் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 - 2012 ஆம் ஆண்டு அடிவாரத்திலிருந்து வத்தல்மலை மேல் பகுதி வரையிலும் ஊரக வளர்ச்சி துறை மற்றும் வனத்துறை சார்பில் 23 கொண்டை ஊசி வளைவுகளுடன் சாலை அமைக்கப்பட்டது. 

சாலை அமைத்த பின்னர் தங்களுக்கு பஸ் வசதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மலைவாழ் மக்கள் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வத்தல்மலைக்கு வருகை தந்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 
அப்போது மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற முதல்வர் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்படி கடந்த 8-ந் தேதி 40 இருக்கை கொண்ட சிறிய ரக பஸ்சை இயக்கி சோதனை செய்தனர்.

அடிவாரத்தில் இருந்து மேல் பகுதிக்கு செல்ல 50 நிமிடங்கள் ஆனது. 30 கிலோ மீட்டர் வேகத்தில் பஸ் இயக்கி பார்க்கப்பட்டது. ஒரு சில அபாயகரமான கொண்டை ஊசி வளைவில் பாதுகாப்பிற்காக இரும்பு தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதை யடுத்து உடனடி யாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் மலைப்பாதை யில் உள்ள கொண்டை ஊசி வளைவில் இரும்பு தடுப்பு வேலி அமைத்து உள்ளனர். 
இனி சிறியரக பஸ் இயக்க வத்தல்மலை சாலை தயாராக உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News