உள்ளூர் செய்திகள்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பெண் பயனாளிகளுக்கு இலவசமாக ஆடுகளை வழங்கிய போது எடுத்தபடம்.

உடன்குடி தேரியூரில் 100 பெண் பயனாளிகளுக்கு 500 வெள்ளாடுகள்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

Published On 2022-05-19 06:38 GMT   |   Update On 2022-05-19 06:38 GMT
உடன்குடி தேரியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 பெண் பயனாளிகளுக்கு 500 வெள்ளாடுகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
உடன்குடி:

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ் ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 500 வெள்ளாடுகள் வழங்கும் விழா உடன்குடி தேரியூர் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது.

உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமை தாங்கினார்.கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர்கள் ராஜன், ராதாகிருஷ்ணன், உடன்குடி ஒன்றியக்குழு துணைத்தலைவி மீரா சிராஜூதீன், பேரூராட்சி மன்றத் தலைவி ஹூமைரா அஸ்ஸாப், பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவர்  பாலமுருகன் வரவேற்றார். தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 100 பயனாளிகளுக்கு 500 ஆடுகளை வழங்கி தமிழக அரசு கிராமப்புற பெண்கள் முன்னேற்றத்திற்கு செயல்படுத்தி வரும் திட்டங்கள், கால்நடைகளை பாதுகாத்து விவசாயத்தை மேம்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் பேசினார்.

கால்நடைத்துறை உதவி இயக்குநர்கள் செல்வகுமார், சுரேஷ், சந்தோஷ், கால்நடை மருத்துவர்கள்சத்யா, நந்தினி, வினோத்குமார், தி.மு.க. வை சேர்ந்த மாநில மாணவரணி துணை செயலர் உமரிசங்கர், இளைஞரனி ராமஜெயம் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் ராமஜெயம், மகாவிஷ்ணு, ரவிராஜா, இளங்கோ, சிராஜூதீன், அலாவுதீன்,  உடன்குடி தொடக்க வேளாண்மைக கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், மணப்பாடுஜெயப்பிரகாஷ் முன்னாள் கவுன்சிலர் சலீம், பெருமாள்புரம்  முகேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News