உள்ளூர் செய்திகள்
.

பராமரிப்பு பணி காரணமாக கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க நேரம் மாற்றம்

Published On 2022-05-18 10:17 GMT   |   Update On 2022-05-18 10:17 GMT
பராமரிப்பு பணி காரணமாக கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றி இயக்கப்படுகிறது என்று ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம்:

திருவலன்காடு-அரக்கோணம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

இதையொட்டி கோவை சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (12680) இன்றும்  வருகிற 24,25,31- ந் தேதி மற்றும் ஜூன் மாதம் 1,7,8 ஆகிய தேதிகளில் கோவை ரெயில் நிலையத்திலிருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு சேலம் வழியாக காட்பாடி வரை மட்டுமே செல்லும்.

இந்த ரெயில் காட்பாடி முதல் சென்னை வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது,

இதேபோல் சென்னை சென்ட்ரல்-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்(12679) இன்றும், வருகிற 24,25,31-ந் தேதி மற்றும் ஜூன் மாதம் 1,7,8 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் முதல் காட்பாடி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரெயில் மேற்கண்ட தேதிகளில் காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு சேலம் வழியாக கோவை செல்லும்.

இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News