உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஜோலார்பேட்டை ரெயிலில் சிறுவன் மீட்பு

Published On 2022-05-18 09:52 GMT   |   Update On 2022-05-18 09:52 GMT
ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டை ரெயிலில் வந்த சிறுவனை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:

திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் இருந்து ஜம்முதாவி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நேற்று காலை வந்து நின்றது.

அப்போது ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் ஓடும் ரெயிலில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என சோதனை செய்தனர்.

முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் சோதனை செய்யும் போது சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த சிறுவனை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் ஈரோடு பகுதியை சேர்ந்தவர் வயது 15 சிறுவன் என தெரிய வந்தது. 

மேலும் தன்னுடைய தாய் இறந்துவிட்டார் இந்நிலையில் மாற்றுதிறனாளி என்பதால் நான் ஓடும் ரெயிலில் பிச்சை எடுப்பதற்காக ரெயிலில் வந்ததாக தெரிவித்தான். 

இதனால் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் இவரது தந்தைக்கு தகவல் தெரிவித்தனர் மேலும் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியில் இயங்கி வரும் எஸ்ஆர்டிபிஎஸ் தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News