உள்ளூர் செய்திகள்
கைதான 3 பேரையும் படத்தில் காணலாம்.

அருகே அருகே வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது

Update: 2022-05-16 10:05 GMT
அருகே அருகே வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 3 கொள்ளையர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அரூர்,

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த ஈட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 65). இவர் தமது மொபட்டில் அரூர்-தீர்த்தமலை சாலையில்,  கடந்த 10-ந் தேதி, இரவு 10 மணியளவில் தனது வீட்டுக்கு சென்றுள்ளார். 

அப்போது, மாவேரிப்பட்டி அரசு குப்பை கிடங்கு வளாகம் அருகே மறைந்திருந்த மர்ம நபர்கள்துரைசாமியின் வாகனத்தை வழிமறித்து அவரை அரிவாளால் வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றனர். 
இந்த சம்பவம் குறித்து அரூர் போலீஸ்  இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைச் சேர்ந்த மணி மகன் யுவராஜ் (வயது24), அரியமங்கலத்தைச் சேர்ந்த கணேசன் மகன் விக்னேஷ்  என்கிற விக்கி (20), அரூரை அடுத்த கோணம்பட்டியைச் சேர்ந்த மாரி மகன் ராமகிருஷ்ணன் (28) ஆகிய  3 பேரும் முதியவரை அரிவாளால் வெட்டி விட்டு இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது.

மேலும், யுவராஜ், விக்னேஷ்  என்கிற விக்கி ஆகிய இருவர் மீதும் தமிழகத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி சம்பவம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதைத்தவிர, அரூர் கடைவீதியில் கடந்த மாதம் ஒரு நகைக்கடையை உடைத்து வெள்ளிப் பொருள்களை திருடியதில் இந்த மூவருக்கும் தொடர்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த தனிப்படையினர் அவர்களிடமிருந்து 2 இருசக்கர வண்டிகள், அரைக்கிலோ வெள்ளிப் பொருள்கள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News