உள்ளூர் செய்திகள்
முகாமில் கலெக்டர் செந்தில்ராஜ் மரக்கன்றுகள் வழங்கிய காட்சி.

ஆத்தூரில் கிராம உதயம் சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள்

Published On 2022-05-14 09:45 GMT   |   Update On 2022-05-14 09:45 GMT
ஆத்தூரில் நடந்த முகாமில் கிராம உதயம் சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆத்தூர்:

ஆத்தூரில் கிராம உதயம் ஆழ்வார்தோப்பு கிளை இயக்கம் சார்பில் இலவச மரக்கன்றுகள்  மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சம்பந்தமான முகாம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.  தாசில்தார் சுவாமிநாதன், ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமால்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கிராம உதயம் நிர்வாக கிளை மேலாளர்  வேல்முருகன் வரவேற்று பேசினார். கிராம உதயம் இயக்குனர் மற்றும் நிறுவனர் டாக்டர்  சுந்தரேசன் சிறப்புரையாற்றினார்.

பின்னர் நடந்த 5,000 மரக்கன்றுகள் வழங்கும் விழாவில் மாவட்ட கலெக்டர் இலவச மரக்கன்றுகளை வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் வழங்கப்பட்டது. 

பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் விதமாக இலவச துணிப் பைகள் இணைக்கப்பட்டது. 

விழாவில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் மகேஸ்வரி முருகப்பெருமாள் மற்றும் ஆத்தூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்  திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம உதயம் இயக்கத்தைச் சேர்ந்த  மகளிர் குழுவினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். கிராம உதயம் தன்னார்வ தொண்டு பகுதி பொறுப்பாளர் ஆரிய நாச்சியார் நன்றி கூறினார்.
Tags:    

Similar News