உள்ளூர் செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்தது

Update: 2022-05-14 05:38 GMT
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, ஒரு சவரன் ரூ. 37 ஆயிரத்து 896க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 737 ஆக உள்ளது.
சென்னை:

தங்கம் விலையில் சில வாரங்களுக்கு முன்பு ஏற்றம் காணப்பட்டது. பின்னர் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வந்த நிலையில் கடந்த 7-ந்தேதி பவுன் ரூ. 39 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலையில் தொடர்ந்து சரிவு காணப்பட்டு வருகிறது.

நேற்று பவுனுக்கு ரூ.544 குநை்து ரூ. 38 ஆயிரத்து 40க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் குறைந்து பவுன் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.144 குறைந்து ரூ. 37 ஆயிரத்து 896க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 737 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.63 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.63.70க்கு விற்கிறது. கடந்த 8 நாட்களில் தங்கம் பவுனுக்கு ரூ.1,120 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News