உள்ளூர் செய்திகள்
சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண

சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

Update: 2022-05-13 09:53 GMT
தஞ்சை ரெயிலடியில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
தஞ்சாவூர்:

தஞ்சை ரெயிலடியில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடந்து வந்தது. அந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை முன்னிட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இதனை முன்னிட்டு நேற்று மாலை சதுர்தச கலச ஸ்நபனம், மஹாசாந்தி திருமஞ்சனம், பின்னர் சர்வ தேவதார்ச்சனம், பூர்ணாஹூதி நடைபெற்றது.

விழாவில் இன்று காலை புண்யாகவாசனம், நித்யஹோமம், பிரதானஹோமம், ததுக்தஹோமம், பூர்ணாஹூதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. இதையடுத்து கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து ஆஞ்சநேயர் பிரதிஷ்டையும், மகா தீபாராதனையும் நடந்தது. 

கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News