உள்ளூர் செய்திகள்
குலசேகரன்பட்டினம் கோவிலில் நேற்று இரவு சுமங்கலி பூஜை நடந்தபோது எடுத்தபடம்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை

Published On 2022-05-13 09:02 GMT   |   Update On 2022-05-13 09:02 GMT
உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.
உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் சித்திரை வசந்தவிழா குலசை முத்தாரம்மன் தசரா குழு, தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை, மாதாந்திர மாவிளக்கு வழிபாட்டு குழு ஆகியவற்றின் சார்பில்  வசந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

நேற்று பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்தது.  இரவு 7 மணிக்கு கோவில் முன்பு 508 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை நடந்தது.பெண்கள் பாடல்கள் பாடி சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.

இன்று 13-ந்தேதி காலை சங்காபிஷேகம் மற்றும் பல்வேறு யாகசாலை பூஜைகளும், இரவு 7 மணிக்கு மாவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. இதில் நாடு நலம் பெற வேண்டியும், நல்ல கன மழை பொழிந்து நாடு செழிக்க வேண்டியும் 508 பெண்கள் கலந்து கொண்டு பாடல்கள் பாடி சிறப்பு வழிபாடு செய்கிறார்கள்.
Tags:    

Similar News